லஞ்சம் பெற்றுக் கொண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கு : அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வது தொடர்பாக அடுத்த மாதம் 24-ம் தேதி விசாரணை - டெல்லி உயர் நீதிமன்றம்

Oct 17 2017 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

லஞ்சம் பெற்றுக் கொண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வது தொடர்பாக அடுத்த மாதம் 24-ம் தேதி விசாரணை நடைபெறும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது ஏராளமான தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாக புகார் எழுந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்‍னோ மற்றும் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இது போன்று முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்‍கில் அன்புமணிக்கு எதிராக ஏற்கெனவே சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்கக்‍கோரி அன்புமணி டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டபோது, அக்‍கோரிக்‍கை நிராகரிக்‍கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஐ.எஸ்.மேத்தா முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக நவம்பர் மாதம் 24ம் தேதி விசாரணை நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00