ஹிமாச்சலப்பிரதேச சட்டசபைத் தேர்தல் - வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
Oct 19 2017 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹிமாச்சல்ப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 68 உறுப்பினர்களைக் கொண்ட ஹிமாச்சலப்பிரதேச சட்டசபைக்கு, வரும் நவம்பர் 9-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் 68 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இந்நிலையில், ஹிமாச்சலப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 59 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய முதலமைச்சர் திரு. வீரபத்ர சிங் சோலன் அர்கி தொகுதியிலும், திரு. ரஜிந்தர் ரானா, சுஜான்பூர் தொகுதியிலும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.