ஒடிசாவில் வெடி விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவு

Oct 19 2017 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசாவில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க, அம்மாநில முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில், உள்ள பாகல்பூர் பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மற்றொரு நிகழ்வாக, ஒடிஷா மாநிலம் ரூர்க்கேலாவில் தீபாளியையொட்டி பட்டாசுக்கடையில் விற்பனை நடைபெற்று வந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் கொழுந்து விட்டு எரிந்த தீயில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடையில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்குக் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும், படுகாயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அளிக்க முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00