இந்திய - ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு : சிவில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்

Oct 19 2017 2:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய - ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு இடையேயான சிவில் அணுசக்‍தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

அணுசக்‍தியை ஆக்‍கப்பூர்வமாக பயன்படுத்தும் வகையில், இந்தியா, சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே அமெரிக்‍கா உள்ளிட்ட சில நாடுகளுடன் இந்தியா இதுதொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்‍கும் நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்புடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டில் பல்வேறு ஷரத்துகள் அடங்கிய ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதுதொடர்பான பணிகள் தேக்‍க நிலையில் இருந்தன. இந்த நிலையில், கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பெல்ஜியம் நாட்டிலிருந்து வருகை தந்த ஐரோப்பிய நாட்டு நிபுணர்கள் மற்றும் இந்திய அணுசக்‍தித்துறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, இருதரப்பிலும் அணுசக்‍தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்ற ஒப்பந்தங்களைப்போல் அல்லாமல், இந்த ஒப்பந்தம் அணுசக்‍தி பாதுகாப்பு, மின்தொழில்நுட்பம் சாராத மருத்துவம், சுகாதாரம், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அம்சங்களுடன் தொடர்புடையது என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00