போஃபர்ஸ் பீரங்கி ஊழல் : தனியார் துப்பறியும் நிறுவனத் தலைவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கப் போவதாக சிபிஐ அறிவிப்பு

Oct 19 2017 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக்‍காலத்தில் நடைபெற்ற போஃபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பாக தனியார் துப்பறியும் நிறுவனத் தலைவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்‍கப் போவதாக சிபிஐ அறிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, சுவீடன் நாட்டிலுள்ள போஃபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டதில் பெருமளவு லஞ்சப் பணம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 1980களில் இந்திய அரசியலில் பெரும் புயலைக்‍ கிளப்பிய போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் நேரடியாக சம்மந்தப்பட்டிருப்பதாகவும் புகார் தெரிவிக்‍கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு அப்போதைய போஃபர்ஸ் நிறுவனத்தின் அதிபராக இருந்த Martin Ardho, இடைத்தரகர் ​Win Chadda மற்றும் Hinduja சகோதரர்கள் மீது CBI வழக்‍குப் பதிவு செய்தது. மேலும் Win Chadda, Quattrocchi அப்போதை பாதுகாப்பு துறை செயலர் பட்னாகர் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்திய அரசியலில் பெரும் பூதாகரமாக வெடித்த போஃபர்ஸ் ஊழல் விவகாரம், தற்போது, மீண்டும் வேறு வடிவில் எழுந்துள்ளது. அமெரிக்‍காவைச் சேர்ந்த தனியார் துப்புரவு நிறுவனமான ஃபேர் பேக்‍ஸின் தலைவர் மைக்‍கேல் ஷெர்மாம், போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதை தடுக்‍க அப்போதைய பிரதமர் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு சதி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். டெல்லிக்‍கு அண்மையில் பயணம்மேற்கொண்ட மைக்‍கேல் ஷெர்மாம், போஃபர்ஸ் பேர ஊழலில் பெறப்பட்ட பணம் சுவிஸ் நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போஃபர்ஸ் பேர ஊழல் தொடர்பாக, மைக்‍கேல் ஷெர்மாம் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் சிபிஐ-ன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து விசாரிக்‍கப் போவதாகவும் சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக்‍ தயாள் தெரிவித்துள்ளார். இதையடுத்து போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்‍கும் எனத் தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00