பங்களாதேஷ் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் - இருதரப்பு உறவுகள், ரோஹிங்கியா அகதிகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை

Oct 22 2017 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை, பங்களாதேஷ் செல்லவுள்ளதாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், தனது நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா முதலீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதையடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், இரண்டாவது முறையாக, நாளை முதல், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, திருமதி சுஷ்மா சுவராஜ் பங்களாதேஷ் செல்லவுள்ளார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சுஷ்மா, தனது சுற்றுப்பயணத்தின்போது, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்க உள்ளார். அப்போது, இருதரப்பு உறவுகள், ரோஹிங்கியா அகதிகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். மேலும், பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் ஹாசன் மஹ்மது அலியையும் திருமதி சுஷ்மா சுவராஜ் சந்தித்துப் பேசவுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00