நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ம் தேதி தொடங்கி ஜனவரி 5ம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு - சட்டமன்றத் தேர்தலுக்‍கு ஏற்றவாறு நாடாளுமன்ற கூட்டங்கள் தாமதமாக நடத்துவது இயல்புதான் என காங்கிரஸுக்‍கு மத்திய அமைச்சர் பதில்

Nov 24 2017 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்‍கு ஏற்றவாறு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது வழக்‍கமான ஒன்றுதான் என காங்கிரஸ் குற்றச்சாட்டுக்‍கு, நாடாளுமன்ற விவகார அமைச்சர் திரு. அனந்த் குமார் பதிலளித்துள்ளார்.

நாட்டில் நிலவும் முக்‍கிய பிரச்னைகளை விவாதிக்‍க அஞ்சி குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட பா.ஜ.க அரசு தயங்குவதாக காங்கிரஸ் உள்ளிட்ட ‍கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன.

இதனிடையே, டிசம்பர் 15ம் தேதியிலிருந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நேற்று முன்தினம் ‌தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை, விடுமுறைகளை தவிர்த்து 14 நாட்களுக்‍கு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு. அனந்த் குமார் இதனை தெரிவித்தார். செய்தியாளர்களிம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலுக்‍கு ஏற்றவாறு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது வழக்‍கமான ஒன்றுதான் என்றும், இது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களிலும் இருந்துவந்த நடைமுறைதான் என்றும் கூறினார்.

இந்த கூட்டத்தொடரில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு முடிவு, ஜி.எஸ்.டி அமல்படுத்திய‌தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், முக்‍கிய மசோதாக்‍கள் மற்றும் பிரச்னைகள் குறித்து விவாதிக்‍கப்பட உள்ளதால் எதிர்க்‍கட்சிகள் தவறாமல் பங்கேற்ற வேண்டும் என்று திரு. அனந்த் குமார் கேட்டுக்‍கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00