குஜராத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் செல்ஃபோன் மூலம் மோசடி செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி புகார் : தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு

Dec 10 2017 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், செல்ஃபோன் இயக்கம் மூலம் மோசடி செய்யப்பட்டதாக, எழுந்த காங்கிரஸ் கட்சியின் புகாரை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் நேற்று முதற்கட்டத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 3 தொகுதிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றிருப்பதாக, காங்கிரஸ் வேட்பாளர் Modhvadia என்பவர் தெரிவித்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் 3 வாக்குச் சாவடிகளில் செல்ஃபோனில் உள்ள புளூடூத் செயல்பாட்டைக் கொண்டு, வாக்குப்பதிவு இந்தியரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள சிப்புகள், வேறு மின்னணு சாதன உதவியுடன் இயக்கும் வகையில் பொறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், இதனை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளரின் இந்த புகார், அடிப்படை ஆதாரமற்றது என்றும், இதுபோன்ற முறைகேடுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் செய்யமுடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசாரணையில், அதுபோன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00