நாடு முழுவதும் 24 உயர்நீதிமன்றங்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேக்கம்

Dec 11 2017 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் இயங்கி வரும் கீழ் நீதிமன்றங்கள், மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களிலும் தினந்தோறும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் நீதிபதிகள் பற்றாக்குறை, நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதி பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் இந்த வழக்குகளின் விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என அரசியல் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்து பிரிவினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு நீதித்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இப்படி நீண்ட காலமாக தேங்கியுள்ள வழக்குகளை அடையாளம் கண்டு, நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள 24 நீதிமன்றங்களில் 40 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் தேங்கியுள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 19 புள்ளி 45 சதவீத வழக்குகள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு தீர்க்‍கப்படாமல் இருப்பவை ஆகும். 20 உயர்நீதிமன்றங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 650 என தெரியவந்துள்ளது. இவ்வாறு 10 ஆண்டுகளுக்கு மேல் தீர்க்‍கப்படாமல் இருக்‍கும் வழக்‍குகளைப் பொறுத்தவரை மும்பை உயர்நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00