ராணுவ தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் ராணுவம், விமானம், கடற்படை ஆகிய முப்படைகளின் தளபதிகள், மலர் வளையம் வைத்து வீர வணக்‍கம் செலுத்தினர்

Jan 15 2018 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி, இந்தியாவுக்கான கடைசி பிரிட்டிஷ் ராணுவ தலைமைத் தளபதி Sir Francis Butcher-ரிடம் இருந்து பொறுப்பேற்று இந்தியாவின் முதல் ராணுவ தலைமைத் தளபதி என்ற பெயர் பெற்ற லெப்ட்டினென்ட் ஜெனரல் K.M. கரியப்பாவின் நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 15-ம் தேதி ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, டெல்லியில் இன்று நடைபெற்ற ராணுவ தினவிழாவையொட்டி, நாட்டுக்‍காக உயிர்நீத்த போர் வீரர்களின் அமர்ஜவான் ஜோதி நினைவு சின்னத்தில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் Bipin Rawat, விமானப்படை தலைமை தளபதி B.S. Dhanoa, இந்திய கடற்படை தலைமை தளபதி Sunil Lanba ஆகியோர் மலர் வளையம் வைத்து வீர வணக்‍கம் செலுத்தினர்.

இதனிடையே, நாட்டின் ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00