சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை தடுப்பதற்கு யாருக்‍கும் அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - காதல் திருமணம் செய்பவர்களை பிரிக்‍கும் முயற்சியில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் எனக்‍ கண்டிப்பு

Jan 16 2018 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிராமங்களில் நடைபெறும் கட்டப் பஞ்சாயத்துகளை மத்திய அரசு தடை செய்யாவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சாதி மறுப்பு திருமணங்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் காப் பஞ்சாயத்து எனப்படும் ஊர் பஞ்சாயத்துகள் செயல்படுகின்றன. இங்கு சாதாரண அடிதடி பிரச்சனையில் தொடங்கி குடும்ப பிரச்னை வரை விசாரித்து மக்கள் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. குறிப்பாக இரு வேறு சாதிகளைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காப் கட்டப்பஞ்சாயத்து தொடர்பான பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

காப் பஞ்சாயத்தாரை கடுமையாக கண்டித்துள்ள நீதிபதிகள், ஒரு ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்வது அவர்களின் விருப்பம் என்றும், சாதிகளை மறத்து காதல் திருமணம் செய்வோரை யாரும் தடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்தால், அவர்களை ஊர் பஞ்சாயத்தில் தண்டிப்பது சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்த நீதிபதிகள், காப் பஞ்சாயத்துக்கு தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் கடும் நடவடிக்‍கை எடுக்கும் என்றும் எச்சரிக்‍கை விடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00