ஹஜ் புனித யாத்திரைக்‍காக இஸ்லாமியர்களுக்‍கு வழங்கப்படும் மானியம் ரத்து - 2012-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை

Jan 16 2018 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்லாமியர்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு இதுவரை அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்தார்.

இஸ்லாமிய மக்களின் 5 புனிதக் கடமைகளில் ஹஜ் புனிதப் பயணம் செல்வதும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. இந்நிலையில் ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான அரசு மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், மானியத் தொகையினை படிப்படியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கையளிப்பதற்காக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் அறிக்கை அடிப்படையில்தான் தற்பொழுது ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான அரசு மானியத்தினை ரத்து செய்வதென்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரு. முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். ரத்து செய்யப்பட்ட மானியம் பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இதுவரை ஹஜ் பயணம் செய்தவர்கள் விமான மார்க்கமாக பயணம் மேற்கொண்டனர். தற்பொழுது மத்திய அரசு, சவுதி அரேபிய அரசுடன் ஒப்பந்தம் ஒன்றினைச் செய்துள்ளது. அதன்படி ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையினை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், கடல்வழி போக்குவரத்தினை மேற்கொள்ளவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணச் செலவானது வெகுவாகக் குறையும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00