டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக மாணவர் மர்ம மரணம் - கழிவறையில் சடலமாக கிடந்தவரை சக மாணவர்கள் மீட்டனர் -​ போலீசார் தீவிர விசாரணை

Jan 17 2018 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் உள்ள யூசி எம் எஸ் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்துவந்த, தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மாணவர் மர்மமான முறையில், கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மாணவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் உள்ள யூசி எம் எஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தார். நண்பர்களுடன் அறையில் தங்கி படித்து வந்த சரத்பிரபு இன்று கழிவறையில் சடலமாக காணப்பட்டார். சக மாணவர்கள் கழிவறையை பயன்படுத்த வந்தபோது அவரது சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த டெல்லி போலீஸார், மாணவர் சரத்பிரபுவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவறையில் தனக்கு தானே இன்சுலின் ஊசி செலுத்திக் கொண்டு சரத்பிரபு இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவரும், கடந்த 2016ம் ஆண்டு விஷ ஊசி மூலம் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மீண்டும் இன்று தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மாணவர் சரத்பிரபுவின் பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மாணவர் சரத்பிரபுவின் மரணம், அவரது சொந்த ஊரான பாரப்பாளையம் பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00