பெங்களுரில் அமைந்துள்ள பெல்லந்தூர் ஏரியில் அதிக அளவில் ரசாயனக் கழிவுகள் கலப்பதன் காரணமாக நீர்ப்பகுதியில் மீண்டும் தீப்பிடித்ததால் மக்கள் பெரிதும் அச்சம்

Jan 20 2018 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெங்களுரில் அமைந்துள்ள பெல்லந்தூர் ஏரியில் அதிக அளவில் ரசாயனக் கழிவுகள் கலப்பதன் காரணமாக அங்குள்ள நீர்ப்பகுதியில் நேற்று மீண்டும் தீப்பிடித்ததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரின் தென்கிழக்கு பகுதியான பெல்லந்தூரில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் பெங்களூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவிலான ரசாயனக் கழிவுகள் கலப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு ரசாயனக் கழிவுகள் கலப்பதால், அந்த ஏரியில் கடந்த ஆண்டு தீப்பிடித்தது. கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதில் ஏரியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், பெல்லந்தூர் ஏரியில் நேற்று காலை 10 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தீ கொழுந்துவிட்டு எரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஏரியின் நடுப்பகுதியில் தீப்பிடித்துள்ளதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து இன்றும் நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00