விமான பயணத்தின் போது செல்ஃபோன் மற்றும் இணையதளம் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரை

Jan 20 2018 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

தற்போது விமானத்தில் செல்லும் பயணிகள், செல்ஃபோன் மற்றும் இணையதளம் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. எலக்ட்ரானிக் கருவிகளில் இருக்கும் சிக்னல்களும், விமானத்தில் இருக்கும் சிக்னல்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விட்டால் ஏதேனும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தகவல் தொழில்நுட்பம் தற்போது அசுர வளர்ச்சி அடைந்துள்ளதால், விமானங்களில் வாய்ஸ், டேட்டா, வீடியோ சேவைகளை இந்திய வான் வெளியில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்களில் வழங்குவது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் கருத்துக்களை மத்திய தொலைதொடர்புத் துறை கேட்டிருந்தது.

இதனையடுத்து, மொபைல் மற்றும் இணைய சேவைகளை சாட்டிலைட் மூலமாகவும், நிலப்பரப்பு சார்ந்த நெட்வொர்க் மூலமாகவும் விமானங்களில் வழங்கலாம் என டிராய் பரிந்துரைத்துள்ளது. இந்த சேவையை இந்திய வான் பரப்புக்குள், விமானத்துக்கு விமானம் வழங்கவும் டிராய் பரிந்துரைத்துள்ளது. அத்துடன், மொபைல் தகவலுக்கான குறைந்தபட்ச உயரத்தடை 3 ஆயிரம் மீட்டர் என்று தெரிவித்துள்ள டிராய், எனவே 3 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் மொபைல் சேவையை பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00