2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு - சி.பி.ஐ-க்‍கு, மத்திய அரசு அனுமதி

Jan 20 2018 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

2ஜி ஸ்பெக்டரம் மெகா ஊழல் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ-க்‍கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டிற்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் 2ஜி ஸ்பெக்டரம் மெகா முறைகேடு வழக்கில், திமுகவைச் சேர்ந்த கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க சிபிஐ அதிகாரிகள் தவறி விட்டதாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி திரு. ஓ.பி.ஷைனி கூறி இருந்தார்.

இந்நிலையில், 2ஜி முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஐ முடிவு செய்தது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, மத்திய சட்ட அமைச்சகத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மத்திய சட்ட அமைச்சகம் எழுத்துப் பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இதனால் 2ஜி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில், சிபிஐ விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இதனால் இந்த மெகா ஊழல் வழக்‍கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00