2ஜி வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் கனிமொழி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு - டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனு தாக்கல்

Mar 21 2018 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ள நிலையில், சி.பி.ஐ-யும் மேல்முறையீடு செய்துள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக தலைமைக் கணக்குத் தணிக்கை துறை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.

இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கடந்தாண்டு ஃபிப்ரவரி மாதம் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சி.பி.ஐ போதிய ஆதாரங்களை அளிக்கவில்லை எனக்கூறிய நீதிபதி திரு. ஓ.பி சைனி, ஆ.ராசா, கனிமொழி மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரை விடுவித்து உத்தரவிட்டார். சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருந்தது. இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்நிலையில் சி.பி.ஐ.யும் தனது மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00