பா.ஜ.க. அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்‍கையும், ஜி.எஸ்.டி வரி விதிப்பும், நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் சீரழித்துவிட்டது - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

Mar 24 2018 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

பா.ஜ.க. அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்‍கையும், ஜி.எஸ்.டி வரி விதிப்பும், நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் சீரழித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலனா ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, காங்கிரசும், பாரதிய ஜனதாவும் தேர்தல் வியூகம் அமைத்து அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாதம் முதல் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று கல்லூரி மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பா.ஜ.க. அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்‍கையும், ஜி.எஸ்.டி வரி விதிப்பும், நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் சீரழித்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், கருப்பு பணம் எதுவும் மீட்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். முன்னதாக, மைசூர் வந்த ராகுல் காந்தி சாமுண்டீஸ்வரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00