நாட்டில் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் வங்கி மோசடிகளால் ஏற்பட்ட இழப்பு ரூ.19,194 கோடியாக உயர்வு : மத்திய புலனாய்வு அமைப்பின் வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு பிரிவு தகவல்

Mar 24 2018 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐதராபாத்தைச் சேர்ந்த Totem Infrastructure நிறுவனம் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. நேற்று முன்தினம் வழக்‍குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட முக்‍கிய வங்கி மோசடி வழக்‍குகளின் எண்ணிக்‍கை 12 ஆக உயர்ந்துள்ளது. பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க்‍ஆஃப் இந்தியா உட்பட, 8 வங்கிகளில் 1,394 கோடி ரூபாய் அளவுக்‍கு இந்த நிறுவனம் மோசடி செய்ததாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டின் 3 மாதங்களில் மட்டும், வங்கி மோசடிகளால் ஏற்பட்ட இழப்பு, 19,194 கோடியாக உயர்ந்துள்ளது. நீரவ்மோடி மற்றும் மெகுல் சோக்‍ஸியால், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்த்தப்பட்ட 12,922 கோடி ரூபாய் மோசடியால் இந்த தொகை கடந்த ஆண்டைவிட வேகமாக அதிகரித்துள்ளது.

சி.பி.ஐ. பதிவு செய்துள்ள மோசடி வழக்‍குகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைவிட அதிகமாக வங்கிகளுக்‍கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கணக்‍குப்படி, திறன் இருந்தும் கடனை திரும்பச் செலுத்தாத வகையில் ஏற்பட்டுள்ள கடன் நிலுவை, ஒன்று புள்ளி ஒன்று ஒன்று லட்சம் கோடிகளாகும் என கணக்‍கிடப் பட்டுள்ளது. 25 லட்சம் ரூபாய்க்‍கு மேல் வாங்கிய கடன்கள் மட்டுமே சி.பி.ஐ.யின் வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு பிரிவு பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00