உத்தரப்பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் : பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு - சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு - எம்.எல்.ஏ. சகோதரர் கைது

Apr 10 2018 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் மற்றும் அவரது சகோதரர்களால் பாலியல் வன்கொடுமைக்‍கு ஆளான மகளுக்‍கு நீதி கேட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்த தந்தை போலீஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்புக்‍குழு அமைக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ-வான குல்தீப்சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள், தன் மகளை பாலியல் வன்கொடுமைக்‍கு உள்ளாக்‍கியதாக, பாதிக்‍கப்பட்ட பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், பல முறை இச்சம்பவம் குறித்து புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்‍கையும் எடுக்‍கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனிடையே, பழைய வழக்கு ஒன்றில் சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலிருந்தும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து, பாதிக்‍கப்பட்ட பெண்ணின் தந்தையின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்புக்‍குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாலியல் புகாருக்‍கு ஆளாகியுள்ள பாரதிய ஜனதா எம்.எல்.ஏ குல்தீப்சிங்-கின் சகோதரர் அதுல் சிங் செங்காரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00