பாரதிய ஜனதா கட்சியின் ஆண்டு வருமானம் இரு மடங்காக உயர்ந்து ஆயிரத்து 34 கோடியாக அதிகரிப்பு - நாட்டின் அனைத்து தேசிய கட்சிகளையும் விட அதிக வருமானம் ஈட்டி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தணிக்‍கை அறிக்‍கையில் தகவல்

Apr 11 2018 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாரதிய ஜனதா கட்சியின் வருமானம் 81 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக ஜனநாயக மறு மலர்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்‍கையில் தெரிவிக்‍கப் பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்‍கைகளால் பல்வேறு தொழில்கள் முடங்கி, வருமான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க.விற்கு மட்டும் இவ்வளவு தொகை வந்தது எப்படி? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் வருமானம், செலவு உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அவை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த வருமானம் மற்றும் செலவின விவரங்கள் குறித்த ஆய்வறிக்‍கையை ADR எனப்படும் ஜனநாயக மறு மலர்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. Roll GFX இதன்படி, பாரதிய ஜனதாவுக்‍கு 2016-2017ம் நிதியாண்டில் 81.18 சதவிகிதம் வருமானம் அதிகரித் துள்ளதாகவும், இந்தக்‍ கணக்‍கின்படி, கடந்த 2015-2016ம் ஆண்டில் அக்‍கட்சிக்‍கு 570 புள்ளி 86 கோடி ரூபாய் வருமானம் வந்ததாகவும், இந்த வருமானம் 2016-2017ம் ஆண்டில் அக்‍கட்சியின் வருமானம் ஆயிரத்து 34.27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், அதேவேளையில், காங்கிரசுக்‍கு இருந்த வருமானம் 261.56 கோடி ரூபாயிலிருந்து 225.36 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாகவும், இது 14 சதவிகிதம் சரிவு என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பா.ஜ.க., காங்கிரசுக்‍கு நன்கொடை ஒரு பெரிய வருமான ஆதாயமாக இருப்பதாகவும் ADR அறிக்‍கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மொத்தத்தில் பா.ஜ.க., காங்கிரஸ், N.C.P., மார்க்‍சிஸ்ட் உள்ளிட்ட 7 தேசியக்‍ கட்சிகள் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரத்து 559.17 கோடி ரூபாய் வசூல் செய்து, அதில் ஆயிரத்து 228.26 கோடி ரூபாய் செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்திடம் கணக்‍கு சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதனிடையே, பா.ஜ.க.வுக்‍கு தான் 81 சதவீதம் வரை வருமானம் அதிகரித்தது எப்படி என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். பண மதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்‍கைகளால் தொழில்கள் முடங்கி வருமானம் குறைந்துள்ள நிலையில் அக்‍கட்சிக்‍கு மட்டும் எப்படி இவ்வளவு வருமானம் வந்தது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00