ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை : சூறாவளியில் சிக்கி குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Apr 12 2018 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் சூறாவளியில் சிக்‍கி, குழந்தைகள் உட்பட 10-க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தானின் Dholpur மற்றும் Bharatpur ஆகிய மாவட்டங்களில், நேற்றிரவு திடீரென சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்‍கெடுத்து ஓடியது. ஆயிரக்‍கணக்‍கான மரங்கள் சாய்ந்து விழுந்தன. தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்‍கப்பட்டன. தொடர் மழை காரணமாக, Dholpur - Bharatpur ரயில்வே வழித்தடங்கள் மூடப்பட்டன. இதனால், 2 மணி நேரம் ரயில் போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டது. சூறாவளி மற்றும் கனமழை தொடர்பான விபத்துக்‍களில், Bharatpur மாவட்டத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். Dholpur மாவட்டத்தில் இன்று காலை வரை குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 4 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அந்த மாவட்டத்தில் கனமழை, சூறாவளிக்‍கு உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 11-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இடிந்து விழுந்ததில் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00