காவிரியில் கர்நாடகா கழிவுநீரை கலக்‍கும் விவகாரம் - விரிவான அறிக்‍கை தாக்‍கல் செய்ய மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணை

Apr 13 2018 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்திலுள்ள காவிரி ஆற்றுப் பகுதிகளில் கர்நாடகா கழிவுநீரை கலப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்‍கில் வரும் ஜூலை மாதத்திற்குள் இறுதி அறிக்‍கை தாக்‍கல் செய்யவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காவிரி ஆறு பாயும் சில இடங்களில் கர்நாடக அரசு கழிவுநீரை கலப்பதற்கு எதிராக கடந்த 2015-ம் ஆண்டு மாண்புமிகு அம்மா மேற்கொண்ட முயற்சியால் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. இதில், ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்‍கிய ஆய்வுக்‍குழு இந்த ஆய்வை நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இதுதொடர்பான இடைக்‍கால அறிக்‍கை தாக்‍கல் செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்‍கு இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. வழக்‍கை விசாரித்த நீதிபதிகள், வரும் ஜூலை மாதத்திற்குள் ஆய்வு தொடர்பான இறுதி அறிக்‍கையை நீதிமன்றத்தில் தாக்‍கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00