65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகை ஸ்ரீதேவி - ஏ.ஆர்.ரகுமானுக்‍கு 2 விருதுகள் - சிறந்த பின்னணிப் பாடகராக ஜேசுதாஸ் தேர்வு

Apr 13 2018 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. சிறந்த நடிகையாக மறைந்த ஸ்ரீதேவி தேர்வு செய்யப் பட்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்‍கு 2 விருதுகளும், ஜேசுதாஸ் சிறந்த பின்னணிப் பாடகராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

65-வது தேசிய திரைப்பட விருதுகளை பிரபல திரைப்பட இயக்‍குநர் சேகர் கபூர் அறிவித்தார். ரஸ்டம் படத்தில் நடித்த அக்‍சய் குமாருக்‍கு சிறந்த நடிகருக்‍கான விருதும், மாம் படத்தில் நடித்த மறைந்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் அறிவிக்கப் பட்டுள்ளது. சிறந்த இந்தி படமாக Newton தேர்வு செய்யப் பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்திற்கும், மாம் படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருதுகள் கிடைத்துள்ளது.

மேலும் காற்று வெளியிடை படத்தில் பாடிய ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும், ஏசுதாஸூக்கு சிறந்த பாடகருக்கான விருதும் அறிவிக்கப் பட்டுள்ளது. டேக்‍ ஆஃப் படத்தில் நடித்த பார்வதிக்‍கு சிறந்த நடிகைக்‍கான சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூலெட் படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி-2 படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. சிறந்த கிராஃபிக்ஸ், சண்டை காட்சி, பிரபலமான திரைப்படம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பாகுபலி-2 விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது.

சிறந்த மலையாள படமாகவும், சிறந்த திரைக் கதைக்கான விருதுக்கும் தொண்டி முதலும் திரிக்‌சாட்சி தேர்வு செய்யப் பட்டுள்ளது. அந்த படத்தில் நடித்த பகத் பாசில் துணை நடிகருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த கன்னட படமாக Hebbettu Ramakka-வும், சிறந்த பெங்காலி திரைப்படமாக மாயூராக்சி, சிறந்த தெலுங்கு படமாக காஷியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதுக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருதுக்கும் பாயங்கம் படம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. அந்த படத்தை இயக்கிய ஜெயராஜ் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது Sinjar இயக்கிய Pampally தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதேபோல், தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் வினோத் கண்ணாவுக்கு வழங்கப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00