உத்தரபிரதேசம் மாநிலத்தில், பாலியல் குற்றச்சாட்டுக்‍கு ஆளான, பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் Kuldeep singh Sengar கைது - நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்‍கை

Apr 14 2018 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தில் 17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள உன்னாவ் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. Kuldeep singh Sengar, நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர், பங்கார்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ Kuldeep singh Sengar, அவரது சகோதரர்கள் உள்ளிட்டோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லம் முன்பு அண்மையில் தீக்குளிக்க முயன்றார். வேலைவாய்ப்பு கேட்டு குல்தீப்பின் இல்லத்துக்கு கடந்த ஆண்டு சென்றபோது, பாலியல் வன்கொடுமைக்கு தான் ஆளானதாகவும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதனிடையே, Kuldeep singh-ன் சகோதரரைத் தாக்கியதாக இளம்பெண்ணின் தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், மர்மமான விதத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, Kuldeep-க்‍கு எதிராக காவல்துறையினர் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கு உடனடியாக சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, Kuldeep-ஐ உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சிபிஐ-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை மே 2-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். இந்நிலையில், குல்தீப்பை லக்னோவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு நேற்று அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். குல்தீப் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00