கர்நாடக மாநில தேர்தலில் எந்த கட்சிக்‍கும் பெருபான்மை கிடைக்‍காமல் தொங்கு சட்டப்பேரவை- காங்கிரஸ் அதிக இடங்கள் கிடைக்‍க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில் தகவல்

Apr 14 2018 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக சட்டப்பேரவைக்‍கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என்றும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பிருப்பதாகவும், கருத்துக்‍கணிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. Roll Visuals கர்நாடகாவில் முதலமைச்சர் திரு. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரும் மே மாதம் அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்‍காலம் நிறைவடைகிறது. இந்நிலையில், அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 12-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனிடையே, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே - கார்வி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி, காங்கிரஸ் கட்சிக்கு 90 முதல் 101 இடங்கள் கிடைக்கும் என்றும் பாரதிய ஜனதாவுக்கு 78 முதல் 86 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்‍கணிப்பு முடிவின்படி, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பலமான 112 இடங்களை எந்தக் கட்சியாலும் அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் 34 முதல் 43 இடங்கள் வரை, வெற்றி பெற வாய்ப்புள்ள மதசார்பற்ற ஜனதா தளம், அங்கு யார் ஆட்சி அமைக்‍க வேண்டும் என்பதை நிர்ணயிக்‍கம் அதிகாரத்தில் இருக்‍கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00