கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது : வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வரும் 24-ம் தேதி கடைசி நாள் - மனுக்களைத் திரும்பப் பெற வரும் 27-ம் தேதி கடைசி நாளாக அறிவிப்பு

Apr 17 2018 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, அடுத்த மாதம் 12-ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை இன்று வெளியிடப்படுகிறது. இதனையடுத்து, வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய, வரும் 24-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 25-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 27-ம் தேதி கடைசி நாளாகும்.

இதனிடையே, முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், பாரதிய ஜனதா 154, காங்கிரஸ் 218, மதச்சார்பற்ற ஜனதா தளம் 126 வேட்பாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கே, மீண்டும் போட்டியிட மூன்று கட்சிகளும் வாய்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00