புழக்கத்திற்கு தேவையான ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடாததால் வங்கிகளுக்கு பணபரிவர்தனையில் நெருக்கடி : அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு

Apr 17 2018 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

புழக்‍கத்திற்கு தேவையான, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடாததால், வங்கிகளுக்‍கு பணபரிவர்தனையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்‍கை மேற்கொண்ட மத்திய அரசு, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக அறிவித்தது. இதனையடுத்து, புதிய 2 ஆயிரம், 500, 200 ஆகிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், புழக்‍கத்திற்கு தேவையான, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடாததால், வங்கிகளுக்‍கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், தட்டுப்பாடு காரணமாக, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் வீடுகளில் பத்திரப்படுத்தி விடுவதாகவும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், வங்கிகளின் வாரா கடன், 9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதில், 88 சதவீதம், கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கியவை என்றும், அந்த கடனை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாரா கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையை, ஆபத்திற்கு அழைத்து செல்வதாக உள்ளது என்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00