நாட்டில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்‍கு பணத்தட்டுப்பாடு - பாரத ஸ்டேட் வங்கி அதிர்ச்சி தகவல்

Apr 19 2018 4:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டில் பணத்தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ள நிலையில், 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்‍கு தட்டுப்பாடு இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், மக்‍களிடம் இருக்‍கும் பணத்தின் அளவு 19 புள்ளி 4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதெனவும், ஆனால், புழக்‍கத்தில் இருக்‍கும் பணத்தின் அளவு 17 புள்ளி 5 லட்சம் கோடியாக உள்ளது என்றும், இந்த இடைவெளியான ஒன்று புள்ளி 9 லட்சம் கோடியே பணப் பற்றாக்‍குறைக்‍கு காரணம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது மொத்தமாக 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்‍கு பணத் தட்டுப்பாடு உள்ளதாக ஆராய்ச்சி அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம். பணப் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை முதலாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது 2வது காலாண்டில் 12 புள்ளி 2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், இந்த தட்டுப்பாடு விரைவில் சரியாகிவிடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00