3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை

May 3 2018 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியை சேர்ந்த ராஜமனோகரன் என்ற இளைஞர் 3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரியை அடுத்துள்ள முருங்கபாக்கத்தை சார்ந்த ராஜ மனோகரன் என்பவர் இந்திய நாட்டிற்காக கடந்த 12 ஆண்டுகளாக முயன்று 3 ஏவுகணைகளை தயாரித்துள்ளார். ஐடிஐ படித்துள்ள ராஜ மனோகரன் தன்னுடைய சொந்த செலவில் முயன்று விஷன் 2020, மிஷன் அர்ஜுனா உள்ளிட்ட மூன்று ஏவுகணைகளை தயாரித்து அதனை அரசு அறிவியல் துறையில் கொடுத்து சான்றிதழ் பெற்றுள்ளார். வரும் ஜுன் மாதம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இவற்றை ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மிஷன் அர்ஜுனா என்ற ஏவுகணை 800 கிலோ மீட்டர் வேகத்தில், 300 கிலோ மீட்டர் தூரத்தினை கடந்து சென்று தாக்க கூடிய வகையில் வடிவமைத்துள்ளார். இது ஒரே நேரத்தில் மூன்று இலக்கினை தாக்க கூடிய வல்லமை பெற்றது என ராஜமனோகரன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இளம் அறிவியலாளருக்‍கான விருது வழங்கப்பட்டு இவர் கவுரவிக்‍கப்பட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00