ஜனநாயகத்தின் தோல்வியை கண்டு நாடே துயரப்படுகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு : காங்கிரஸ்தான் ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியது - அமித்ஷா

May 18 2018 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக அரசியல் நிகழ்வு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்ததற்கு பதிலளித்துள்ள பாரதிய ஜனதா தலைவர் திரு. அமித் ஷா காங்கிரஸ் கட்சிதான் ஜனநாயகப் படுகொலையை செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், பெரும்பான்மை இல்லாத சூழலில் கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்திருப்பது அரசியலமைப்பின் கேலிக்கூத்து என திரு. ராகுல் காந்தி கடுமையாக சாடினார். மேலும், கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்வுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் இருக்‍கும் எனவும், ஜனநாயகத்தின் தோல்வியை கண்டு நாடு துயரப்படுவதாகவும், அவர் விமர்சித்திருந்தார்.

இதற்கு பா.ஜ.க. தலைவர் திரு. அமித்ஷா தனது டிவிட்டர் பக்‍கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் லாபத்துக்காக, கர்நாடக தேர்தலில் வெறும் 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு, காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்‍க வாய்ப்பு வழங்கியதுதான் ஜனநாயக படுகொலை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00