கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி 2 நாளில் முடிவுக்‍கு வந்ததால் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சித் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறார் - வரும் புதன்கிழமை முதலமைச்சராக பதவியேற்பு

May 20 2018 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில், எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி, 2 நாளில் முடிவடைந்ததை அடுத்து, மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சித் தலைவர் திரு. H.D. குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறார். வரும் புதன்கிழமை அவர், முதலமைச்சராக பதவியேற்கிறார்.

காங்கிரஸ் ஆதரவோடு, 117 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை, கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம், திரு. H.D. குமாரசாமி ஏற்கெனவே அளித்திருந்தும், அவரை ஆட்சியமைக்க அழைக்காமல், அறுதிப் பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க முடியாத நிலையில், பாரதிய ஜனதாவின் எடியூரப்பா நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் திரு. குமாரசாமி, கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவை, பெங்களூருவில், ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். ஆட்சியமைக்குமாறு அவருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இச்சந்திப்புக்குப் பின்னர், வரும் 23ம் தேதி புதன் கிழமையன்று, முதலமைச்சராக தான் பதவியேற்க இருப்பதாகத் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளுநர் தனக்கு 15 நாள் அவகாசம் அளித்திருப்பதாகவும், ஆனால், இவ்வளவு நாள் தனக்குத் தேவையில்லை என்றும் அவர் கூறினார். மிக விரைவில் சட்டப்பேரவையைக் கூட்டி, தனது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாகவும் திரு. குமாரசாமி குறிப்பிட்டார். கர்நாடகாவின் துணை முதலமைச்சர் பதவி காங்கிரசுக்கு வழங்கப்படும் என பெங்களூருவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அறுதிப் பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதாவை, ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திரு. அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00