கர்நாடக கூட்டணி அரசில் யார் யாருக்‍கு என்னென்ன துறைகள் - காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை

May 20 2018 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது, எந்த இலாக்களை ஒதுக்குவது குறித்து இன்று அக்கட்சித் தலைவர்கள் பெங்களூரூவில் கூடி முடிவு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்க உள்ள திரு.ஹெச்.டி.குமாரசாமி நாளை டெல்லி சென்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருமதி.சோனியா காந்தி, தற்போதைய தலைவர் திரு.ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா உருவான போதிலும், அறுதிப்பெரும்பான்மை கிடைக்‍காத நிலையில், அக்‍கட்சியைச் சேர்ந்த திரு.எடியூரப்பாவுக்‍கு கடந்த 17-ஆம் தேதி மாநில ஆளுநர் திரு.வஜுபாய் வாலா, முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி உச்ச நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து நேற்றைய தினம் சட்டப்பேரவையில் பலப்பரீட்சை நடத்த திரு.எடியூரப்பாவுக்‍கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பலப்பரீட்சையில் இறங்குவதற்கு முன்பாக வெற்றி பெறத் தேவையான எண்ணிக்கையைப்பெற, காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏக்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபட பாரதிய ஜனதா கட்சி முயன்றது. ஆனால், அதனுடைய முயற்சி வெற்றிபெறாத நிலையில், சட்டப் பேரவையில் பலப்பரீட்சை நடத்தாமலேயே திரு.எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க திரு.ஹெச்.டி.குமாரசாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட திரு.குமாரசாமி, வரும் புதன்கிழமை அன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருமதி.சோனியா காந்தி, தற்போதைய தலைவர் திரு.ராகுல் காந்தி ஆகியோரை நேரில் அழைக்க திரு.குமாரசாமி நாளை டெல்லி செல்கிறார். இதனிடையே இன்று பெங்களூருவில் இரு கட்சித் தலைவர்களும் சந்தித்து, யார் யாருக்கு அமைச்சர் பதவி தரவேண்டும், எந்தெந்த இலாக்காவை ஒதுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்க உள்ளனர். துணை முதலமைச்சர் பதவி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.ஜி.பரமேஸ்வராவுக்கு வழங்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், உள்துறை, நிதி, சமூக நலன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பம், சுற்றுலா ஆகிய துறைகள் காங்கிரஸ் கட்சிக்கும், வேளாண்மை, சமூக நலப்பணித்துறை, வருவாய், சுங்கவரி, கால்நடை பராமரிப்புத்துறை ஆகியவை மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00