மும்பையின் துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள பழமையான படேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

Jun 9 2018 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ர மாநிலம் மும்பையின் துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள பழமையான படேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்டது.

மஹாராஷ்ட்ர மாநிலம் மும்பையின் துறைமுகம் பகுதியில் உள்ள பழமையான படேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டடம் முழுவதும் பரவிய தீயால் அப்பகுதி கரும் புகைமண்டலமாக மாறியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைக்‍கும் பணியில் ஈடுபட்டனர். 18 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்தால் சேதமடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், 2 வீரர்கள் காயமடைந்தனர்.

5 தளங்கள் கொண்ட, பிரிட்டிஷார் காலத்து கட்டடமான இது பயன்படுத்தப்படாமல் காலியாக இருந்ததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பீகார் தலைநகர் பாட்னாவின் தீதர்கன்ச் பகுதியில் உள்ள திரவ எரிவாயு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 6 தீ அணைப்பு வாகனங்களில் வந்த சென்ற தீ அணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். தீ விபத்துக்‍கான காரணம் தெரியாத நிலையில், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சாய தொழிற்சாலை ஒன்றின் மூன்றாவது தளத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில், 35 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அதே நேரம், தொழிற்சாலையில் உள்ள எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்தும் ஏற்பட்டது. இந்த விபத்துகளில் காயமடைந்தவர்கள், மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள பெயிண்ட் கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வண்டிகளில் விரைந்த சென்ற வீரர்கள் தீயை அணைத்தனர். அதிஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிழப்பும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • AREMPESAVIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00