வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது உறுதி - சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்

Jun 11 2018 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக, கூடுதலாக சில தொகுதிகளை விட்டுக்‍ கொடுத்தாவது, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை தொடருவோம் என சமாஜ்வாடியின் திரு. அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், திரு. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக் கட்சியும் இணைந்து, பா.ஜ.க வேட்பாளர்களை தோற்கடித்தன. இதையடுத்து, வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மெய்ன்பூரி பகுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் திரு. அகிலேஷ் யாதவ், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதை உறுதி செய்வதே தங்கள்​தலையாய பணி எனக்‍ கூறினார். பாரதிய ஜனதாவை வீழ்த்த, கூடுதலாக சில தொகுதிகளை விட்டுக்‍ கொடுத்தாவது, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை தொடருவோம் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2914.00 Rs. 3117.00
மும்பை Rs. 2936.00 Rs. 3109.00
டெல்லி Rs. 2949.00 Rs. 3123.00
கொல்கத்தா Rs. 2949.00 Rs. 3120.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00