கர்நாடக மாநில ஜெயநகர் சட்டமன்ற தொகுதிக்‍கான தேர்தலில் காங்கிரஸ் வெற்றி - பா.ஜ.க வேட்பாளரை 3 ​ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்‍குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி

Jun 13 2018 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலம் ஜெயநகர் சட்டமன்ற தொகுதிக்‍கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 3 ஆயிரத்து 775 வாக்‍குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 79-ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கும், கடந்த மாதம் 12-ம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பெங்களூரில் உள்ள ஜெயநகர் தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கான தேர்தல், ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதியில், நேற்று முன் தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 55 புள்ளி ஒன்பது மூன்று சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று எண்ணப்பட்டன. முதல் சுற்றிலிருந்தே காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி முன்னிலையில் இருந்து வந்தார். இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் பிரகலாத் பாபுவைவிட 3 ஆயிரத்து 775 வாக்‍குகள் கூடுதலாக பெற்று காங்கிரசின் சவுமியா ரெட்டி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 79-ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00