இந்திய விமானப்படைக்கு 6 அதி நவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் : அமெரிக்கா ஒப்புதல்

Jun 13 2018 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய விமானப்படைக்கு 6 அதி நவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எல்லையில், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், பாதுகாப்பை தீவிரப்படுத்தும் வகையில், அமெரிக்காவிடமிருந்து அதி நவீன AH-64E அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்‍கு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முதல் கட்டமாக, 6 ஆயிரத்து 285 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்‍கா விற்பனை செய்யவுள்ளது.

இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், இந்தியாவின் பாதுகாப்புத் துறையை நவீனப் படுத்துவதுடன், எதிரி நாட்டு ராணுவ தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் பயன்படும் என அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை தெரிவித்துள்ளது. இரவிலும் இலக்குகளைத் துல்லியமாக கண்டறியும் திறன், தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஹெலிஃபையர் கவசம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • AREMPESAVIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00