வங்கி மோசடி வழக்‍கில் தேடப்படும் நிரவ்மோடி லண்டனில் இருந்து பெல்ஜியம் நாட்டிற்கு தப்பியோட்டம் - சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் தப்பிச்சென்றது அம்பலம்

Jun 14 2018 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்து, தலைமறைவாக உள்ள வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து​ பெல்ஜியத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அவர் பிரசல்ஸ் நகருக்‍கு ஓட்டம் பிடித்தது அம்பலமாகியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில், அதில் பணியாற்றும் அதிகாரிகளின் உதவியோடு 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்துள்ளதாக, குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோருக்கு எதிராக, அமலாக்க இயக்குநரகம், சி.பி.ஐ ஆகியவை, வழக்‍குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின்பேரில், குற்ற வழக்கு பதிவு செய்யும் முன்பாக, அவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பதுங்கிய நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவுக்‍கு கொண்டு வரும் முயற்சியை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நிரவ் மோடி, மெஹுல் சோக்‍ஸி ஆகிய இருவரையும் கைது செய்ய இன்டர்போல் ஒத்துழைப்புடன் நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவர்கள் இருவருக்‍கும் எதிராக ரெட்கார்னர் எனப்படும் கண்காணிப்பு எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டது. இதனால், தன் மீதான பிடி இறுகுவதை அறிந்த நிரவ்மோடி, தற்போது லண்டனில் இருந்து பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்க்‍கு தப்பிச் சென்றுள்ளார். அவரது இந்திய பாஸ்போர்ட் ஏற்கெனவே முடக்‍கப்பட்டிருப்பதால், சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் அவர் பெல்ஜியத்திற்கு ஓட்டம்பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அண்மையில் நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரருக்‍கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து இந்தியா சிங்கப்பூரிடம் முறையிடும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00