காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கடும் எதிர்ப்பு : நாடாளுமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் - மேலாண்மை ஆணையம் அமைவதில் சிக்கல்

Jun 19 2018 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர். நாடாளுமன்றத்தை கூட்டி விவாதிக்‍க வேண்டுமென அவர் கூறியிருப்பதால், மேலாண்மை ஆணையம் அமைவதில் சிக்‍கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையான காவிரி உரிமையை நிலைநாட்ட மேலாண்மை வாரியம் அமைக்‍கவேண்டுமென ஒட்டுமொத்த மக்‍களும் போராடி வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், நீண்ட இழுபறிக்‍கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்தை மட்டுமே அமைக்‍க மத்திய அரசு முனைந்துள்ளது. இந்த நடவடிக்‍கையிலும் தொய்வான நிலையே உள்ளது.

இந்நிலையில், காவிரி ஆணையத்திற்கு முட்டுக்‍கட்டை போட்டுவரும் கர்நாடக அரசு அதற்கான உறுப்பினர்களையும் இன்னும் நியமிக்‍கவில்லை. இந்நிலையில் கர்நாடகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி, நேற்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான விவகாரத்தில் மறு சீராய்வு மனு தாக்‍கல் செய்வது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறினார்.

மேலும், மேலாண்மை ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்‍க வேண்டும் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனால், மேலாண்மை ஆணையம் அமைவதில் சிக்‍கல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00