ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்‍கு பொதுமக்‍கள், ராணுவ வீரர்கள் பலி - கூட்டணி முறிந்தது நல்ல விஷயம் என காங்கிரஸ் கருத்து

Jun 19 2018 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி - பாரதிய ஜனதா கூட்டணி முறிந்தது மிகவும் நல்ல விஷயம் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, கடந்த மூன்று ஆண்டுகளில் இம்மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக பொதுமக்களும், ராணுவ வீரர்களும் பலியாகி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

காஷ்மீரில் கூட்டணி ஆட்சியில் இருந்து பாரதிய ஜனதா வெளியேறியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.குலாம் நபி ஆசாத், இந்த கூட்டணி முறிவடைந்ததால், காஷ்மீர் மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளில் இந்த கூட்டணி ஆட்சியின் கீழ், காஷ்மீரில் அமைதி சீர்குலைந்து விட்டதாகவும், இம்மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக பொதுமக்களும், ராணுவ வீரர்களும் பலியாகி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைக்கும் கேள்விக்கே இடமில்லையென்றும் திரு.குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00