ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியால் ராணுவ நடவடிக்கைகள் பாதிக்காது : ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் உறுதி

Jun 21 2018 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள ஆளுநர் ஆட்சியால், அங்கு நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகள் பாதிக்காது என, ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, பாரதிய ஜனதா திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, தனது முதலமைச்சர் பதவியை மெஹ்பூபா முஃப்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து, அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்துவதற்கான ஒப்புதலை, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்நிலையில், ராணுவத் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராணுவ நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றார். இதனிடையே, தற்போது ஏற்பட்டுள்ள ஆளுநர் ஆட்சியால், தீவிரவாதத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இனியும் தொடரும் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00