அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு : இத்தாலியை சேர்ந்த இடைத்தரகரை நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை

Jun 23 2018 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய, இத்தாலியை சேர்ந்த இடைத்தரகரை ஒப்படைக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளதால், அவரை நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சி.பி.ஐ. அணுகி உள்ளது.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், மிக முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இங்கிலாந்தை சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த பேரத்தை செய்து முடிப்பதற்காக, 423 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக வெளியான தகவலையடுத்து, ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்த லஞ்ச விவகாரம் குறித்து சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட 3 பேரில் ஒருவரான இத்தாலியை சேர்ந்த 71 வயதாகும் கர்லோ கெரோசா என்பவரை பிடிக்க சர்வதேச போலீஸ் மூலம் 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது. இதன்பேரில், இத்தாலி போலீசார் கர்லோ கெரோசாவை கைது செய்தனர்.

இதனிடையே, அவரிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்பதால், அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அக்கோரிக்கையை இத்தாலி நிராகரித்துள்ளது. இந்தியாவுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் எதுவும் இல்லாததை அந்நாடு சுட்டிக்காட்டி உள்ளது. இந்நிலையில், கெரோசாவை நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சி.பி.ஐ. அணுகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00