புதுச்சேரியில் அரசுப் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு - குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்சமாக 10 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் அதிகரிப்பு

Jun 23 2018 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் அரசுப் பேருந்து கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்சமாக 10 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்‍கு முன்பு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபோது, புதுச்சேரியிலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததால் கட்டண உயர்வு அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்‍கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் பேருந்து கட்டண உயர்வுக்‍கான கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு சார்பில் இயக்‍கப்பட்டு வரும் நகர்ப்புற மற்றும் புறநகர் பேருந்துக்‍கான கட்டணங்களை உயர்த்தி சாலை போக்‍குவரத்துக்‍கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்சமாக 10 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவுமுதல் அமலுக்‍கு வந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00