ஜம்முவிலிருந்து 623 பெண்கள் உட்பட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இன்று அமர்நாத் பயணம்

Jul 14 2018 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவிலிருந்து, 623 பெண்கள் உட்பட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இன்று அமர்நாத் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு செய்துதரப்பட்டுள்ளது.

அமர்நாத் குகை பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக, ஆண்டுதோறும் நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 60 நாள் அமர்நாத் யாத்திரை, கந்தர்பால் மாவட்டம் Baltan மற்றும் அனந்தநாக் மாவட்டம் Pahalgam வழியாக நடைபெற்று வருகிறது. நேற்றுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பக்தர்கள், பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று, 623 பெண்கள், 144 சாதுக்கள் உள்ளிட்ட மூன்றாயிரத்து 48 யாத்ரீகர்கள், 112 வாகனங்களில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டனர். அவர்களில் ஆயிரத்து தொள்ளாயிரத்து 73 பேர் Pahalgam பாதை வழியாக Nunwan மலையடிவார முகாமிற்கும், ஆயிரத்து 75 பேர் Baltan பாதை வழியாக அடிவார முகாமிற்கும் புறப்பட்டுச் சென்றனர். இவ்விரு அணியினரும், இன்றைய தினமே முகாம்களை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரக்சாபந்தன் விழா கொண்டாடப்படும் ஆகஸ்ட் 26-ம் தேதி, அமர்நாத் யாத்திரை நிறைவுபெறும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00