தாஜ்மஹால் நுழைவு கட்டணம் உயர்வு : இந்திய தொல்லியல் ஆய்வு துறை அறிவிப்பு

Aug 9 2018 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்வையிடுவதற்கான நுழைவு கட்டணத்தை, இந்திய தொல்லியல் ஆய்வு துறை உயர்த்தியுள்ளது.

ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் நினைவு சின்னத்தை பார்ப்பதற்காக நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்தியாவின் பெருமைக்குரிய சின்னமான தாஜ்மஹால் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் அதன் பொலிவை இழந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தாஜ்மஹாலை பராமரிக்க முடியாமல் மத்திய அரசும் திணறி வருகிறது. இந்நிலையில், தாஜ்மஹால் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் ஆய்வு துறை அறிவித்துள்ளது. புதிய கட்டணத்தின்படி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தலா ஆயிரத்து 100 ரூபாய் நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும், உள்ளூர் சுற்றுலா பயணிகள் 40 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஆக்ரா சுற்றுலா நல சங்க தலைவர் பிரகலாத் அகர்வால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்டணத்தை மட்டும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்லும் தொல்லியல் துறை, நினைவுச் சின்னங்களை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • AREMPESAVIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00