முத்தலாக்‍ சட்டத்திருத்த மசோதாவுக்‍கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைதானாலும் நீதிமன்றம் ஜாமீன் தரும் வகையில் சட்டத்திருத்தம்

Aug 9 2018 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

முத்தலாக்‍ சட்டத்திருத்த மசோதாவுக்‍கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைதானாலும் நீதிமன்றம் ஜாமீன் தரும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

முத்தலாக்‍ சட்டத்தை எதிர்த்து பாதிக்‍கப்பட்ட இஸ்லாமியப் பெண்கள் தொடர்ந்த வழக்‍கை விசாரித்த உச்சநீதிமன்றம், இச்சட்டம் அரசியல் சாசனத்துக்‍கு எதிரானது எனக்‍கூறியது. இதையடுத்து, முத்தலாக் விவாகரத்தை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதா தயாரிக்கப்பட்டு அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால், மூன்று ஆண்டு வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் இம்மசோதா வகை செய்கிறது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக் மசோதா மக்‍களவையில் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, முத்தலாக்‍ மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், முத்தலாக்‍ சட்டத்திருத்த மசோதாவுக்‍கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைதானாலும் நீதிமன்றம் ஜாமீன் தரும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00