ஜவஹர்லால் நேரு குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ கூறிய சர்ச்சைக்‍குரிய கருத்து - பல்வேறு தரப்பினரும் கண்டனம்

Aug 11 2018 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, பண்டிதராக இருக்‍க முடியாது என, பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் முக்‍கிய நிர்வாகிகள் பலர் சர்ச்சைக்‍குரிய கருத்துகளை வெளியிட்டு பொதுமக்‍களிடம் அதிருப்தியையும், கட்சித் தலைமைக்‍கு தருமசங்கடத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தின் Ramgarh தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த Gyan Dev Ahuja என்பவர், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து சர்ச்சைக்‍குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

நேரு ஒரு பண்டிதரல்ல எனத் தெரிவித்துள்ள அவர், இறைச்சி உண்பவர்கள் எப்படி பண்டிதர்களாக இருக்‍க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Gyan Dev Ahuja-வின் இந்தக்‍ கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் சர்ச்சைக்‍குரிய கருத்துகளை தெரிவிப்பது இது முதன்முறையல்ல. சில நாட்களுக்‍கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழகம், பாலியல் தொழில் மற்றும் போதைப்பொருட்களுக்‍கான ஒரு மையம் என்று கருத்து தெரிவித்திருந்த Gyan Dev Ahuja-வுக்‍கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00