கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை ஈடுகட்ட தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்‍கவேண்டும் - நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு 400 கோடி ரூபாயை ஒதுக்‍க முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தல்

Aug 13 2018 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்‍கும் அதிகமான அளவுக்‍கு மிகக்‍ கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனை சமாளிக்‍க தேசியப் பேரிடர் நிவாரணநிதியிலிருந்து ஆயிரத்து 220 கோடி ரூபாயும், மத்திய அரசின் பங்காக 400 கோடி ரூபாயும் உடனடியாக ஒதுக்‍க வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பெய்த மழையால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு அங்கு வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கோழிக்‍கோடு, வயநாடு, ஆலப்புழா போன்ற மாவட்டங்கள் இந்த மழையால் மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளன. இதனை கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து உடனடியாக 100 கோடி ரூபாயை திரு. ராஜ்நாத் சிங் கேரள அரசுக்‍கு வழங்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில் வெள்ள நிலவரம் குறித்துதெரிவித்துள்ள திரு. பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்து 316 கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக்‍ கூறினார். எனவே உடனடி நிவாரணமாக தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆயிரத்து 220 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும் என வலியுறுத்திய அவர், கூடுதலாக 400 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உடனடியாக நிவாரணம் ற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏற்கெனவே 820 கோடி ரூபாய் கோரப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வெள்ளத்தால் 20 ஆயிரம் வீடுகள் அடியோடு சேதமடைந்திருப்பதாகவும், சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்‍கு சாலைகள் சின்னாபின்னமாகி​இருப்பதாகவும் கூறினார்.

இதனிடையே, இந்த​மழைவெள்ளத்தால் பாதிக்‍கப்பட்டு பாஸ்போர்ட்டுகளை இழந்தவர்களுக்‍கு புதிதாக கட்டணமின்றி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் என வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இடுக்‍கி அணை, அதனுடைய அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடுக்‍கி அணையின் முழு கொள்ளளவு 2 ஆயிரத்து 403 அடியாக உள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 2 ஆயிரத்து 394 புள்ளி ஒன்பது, நான்கு அடியாக உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00