இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க சீன அரசிடம் ஒப்பந்தம் : மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் குற்றச் சாட்டு

Aug 14 2018 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சீன அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

பட்டுசாலை பொருளாதார திட்டத்தின் கீழ் வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை சீனாவில் உள்ள அரசு நிறுவனம் தற்போது தொடங்க உள்ளது. சீனாவின் ரூபாயான யுவானை அதிகளவில் அச்சடிப்பதற்காக நாடு முழுவதும் பல புதிய அச்சகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில் சீன ரூபாய் நோட்டு அச்சடிப்பு கார்பரேஷனின் தலைவர் லியூ குயிஷெங், "அண்டை நாடுகள் மற்றும் மிக நெருக்கமான நட்புறவில் உள்ள நாடுகளுக்கு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா, பிரசில், போலந்து ஆகிய நாடுகளுடன் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ளோம்" என குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சீனாவில் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் செய்திக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'இந்திய ரூபாய் நோட்டையே வெளிநாட்டில் அச்சடிப்பதுதான் மேக் இன் இந்தியாவா' என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளார். அண்டை நாடுகளில் சீனாவின் கரம் வலுவாக இறங்குவதை இந்தியா ஏன் எதிர்க்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00