ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களைத் தொடர்ந்து, கர்நாடகத்திலும் பெட்ரோல் - டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு
Sep 17 2018 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களைத் தொடர்ந்து, கர்நாடகத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர் உயர்வை சந்தித்து வரும் நிலையில், அதன் விலையை குறைக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சில மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தன. அதன்படி ராஜஸ்தான் மாநிலமும், ஆந்திர மாநிலமும் பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்தன. அந்த வரிசையில் தற்போது கர்நாடக மாநிலமும், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைத்துள்ளது.